முக்கோணத்தின் வகைகள்

சமபக்க முக்கோணம்:
                         எல்லாப் பக்கங்களும் ஒரே அளவு நீளமுள்ளதாக இருப்பின் அது சமபக்க முக்கோணம் எனப்படும்.சமபக்க முக்கோணத்தின் உட்கோண அளவு 60°.

இரு சமபக்க முக்கோணம்:
                         இரண்டு பக்கங்கள் சம அளவுள்ளதாக இருக்கும் முக்கோணம் இருசமபக்க முக்கோணம் எனப்படும்.இருசமபக்க முக்கோணமொன்றில் இரண்டு கோணங்களும் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும்.


 அசமபக்க முக்கோணம்:
                       ஒன்றுக்கொன்று சமமில்லாத மூன்று  பக்கங்களையும் உடைய முக்கோணம் ஆகும். இவ்வகை முக்கோணத்தில் ஏதாவது இரண்டு கோணங்களும் சமனற்றவையாகும். 




குறுங்கோண முக்கோணம்:
                          எல்லாக் கோணங்களும் செங்கோணத்திலும் சிறிதாக இருப்பின் அத்தகைய முக்கோணம் ஒரு குறுங்கோண முக்கோணம் ஆகும்.



விரிகோண முக்கோணம்:
                         முக்கோணத்திலுள்ள யாதேனும் ஒரு கோணம் செங்கோணத்திலும் பெரிதாக இருந்தால் அது விரிகோண முக்கோணம் எனப்படும்.


 செங்கோண முக்கோணம்:
                         ஒரு கோணம் செங்கோணமாக அமைந்துள்ள முக்கோணங்கள், செங்கோண முக்கோணங்கள் எனப்படுகின்றன.          










Comments

Popular posts from this blog

முக்கோணம்