சமபக்க முக்கோணம்: எல்லாப் பக்கங்களும் ஒரே அளவு நீளமுள்ளதாக இருப்பின் அது சமபக்க முக்கோணம் எனப்படும்.சமபக்க முக்கோணத்தின் உட்கோண அளவு 60°. இரு சமபக்க முக்கோணம்: இரண்டு பக்கங்கள் சம அளவுள்ளதாக இருக்கும் முக்கோணம் இருசமபக்க முக்கோணம் எனப்படும்.இருசமபக்க முக்கோணமொன்றில் இரண்டு கோணங்களும் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும். அசமபக்க முக்கோணம்: ஒன்றுக்கொன்று சமமில்லாத மூன்று பக்கங்களையும் உடைய முக்கோணம் ஆகும். இவ்வகை முக்கோணத்தில் ஏதாவது இரண்டு கோணங்களும் சமனற்றவையாகும். குறுங்கோண முக்கோணம்: எல்லாக் கோணங்களும் செங்கோணத்திலும் சிறிதாக இருப்பின் அத்தகைய முக்கோணம் ஒரு குறுங்கோண முக்கோணம் ஆகும். ...
முக்கோணம்: முக்கோணம்என்பதுமூன்று கோணங்களையும் மூன்று உச்சிகளையும் நேர்க்கோடுகளாலான மூன்று பக்கங்களையும் கொண்ட ஒரு தட்டையான இரு பரிணாம உருவமாகும். முக்கோணத்தி்ன் பண்புகள்: 3 விளிம்புகள் 3 உச்சிகள் மூன்று கோணங்களின் கூடுதல் 180° முக்கோணத்தி்ன் வகைகள்: பக்க அளவுகளின் அடிப்படையில் முக்கோணத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.அவை, சமபக்க முக்கோணம் இரு சமபக்க முக்கோணம் அசமபக்க முக்கோணம் கோணங்களின் அடிப்படையில் முக்கோணத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.அவை, குறுங்கோண முக்கோணம் செங்கோண முக்கோணம் விரி கோண முக்கோணம்
Comments
Post a Comment